Socialize

3D யில் தோன்றப் போகிறார் ரஜனி!

ஜோர்ஜ்

சங்கரின் இயக்கத்தில் ரஜனி நடித்த சிவாஜி படம் தற்போது 3டி வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஏவிஎம் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை தற்போது 3டி வடிவத்திற்கு மாற்றி வருகின்றனர்.

3டியில் மாற்றுவதற்கு வசதியாக 185 நிமிடம் நீளமான சிவாஜி படம் தற்போது 137 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரசாத் வண்ணக் கூடத்தில் இதன் முன்னோடி பிரமாண்டமான முறையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2007இல் வெளியிடப்பட்ட சிவாஜி பெற்ற பிரமாண்ட வெற்றியை இந்த 3டி வடிவம் மிஞ்சும் என்றே சுப்பர்ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS