Socialize

3D யில் வருகிறது Life of Pi


கனடிய எழுத்தாளரான யன் மாட்டல் எழுதிய Life Of Pi என்ற பிரபல நாவல் தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது. 2001ல் பிரசுரமான இந்த நாவல் உலகெங்கும் விற்பனையில் சாதனைகள் படைத்ததுடன் பல்வேறு விருதுகள், பரிசுகளையும் பெற்றிருந்தது. இந்தியாவிலிருந்து கனடா வரும் வழியில் கப்பல் உடைந்து வள்ளம் ஒன்றில் புலியொன்றுடன் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்த ஒருவரின் அனுபவம் பற்றியதே இந்தக் கதை.

இந்தப் படத்தை புகழ் பெற்ற தாய்வான் அமெரிக்க இயக்குனர் ஆங் லீ இயக்கியுள்ளார். வசூலில் சாதனை படைத்த Crouching Tiger, Hidden Dragon, மற்றும் விருதுகள் பல பெற்ற Brokeback Mountain போன்ற படங்களை இயக்கிய அவர் தற்போது நூறு மில்லியன் செலவில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நான்கு புலிகள், 23 நாடுகளில் இருந்து வந்த நடிகர்கள் என பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 3D முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

நியூ யோர்க் பட விழாவில் இந்தப் படம் தற்போது திரையிடப்பட்டிருக்கிறது.

இதென்ன, பெரிய விடயம் ஒரு புலியோடு வள்ளத்தில் அகப்பட்டவன் பற்றி படம் எடுப்பது. தமிழர்கள் ஆயிரக்கணக்கான புலிகளுடன் முப்பது வருடம் வாழ்ந்தார்களே, அதைப் பற்றி யாராவது படம் எடுக்க மாட்டார்களா என்று அங்கலாய்க்கிறார் நம்மவர் ஒருவர்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS