Socialize

யாருக்கு சொல்லியழ? 1

யாருக்கு சொல்லியழ? 1

இளவழகன்

இரண்டாம் உலகப்போர் முதல் இன்றுவரை மேற்க்கு நாடுகளின் அரசியல் வீரர்கள் தாம் ஜனநாயகத்தை உலகெங்கும் நிலைநாட்ட அயராது உழைத்து வருவதாயும் அத்துடன் தேவைப்படின் தம் உயிர்களை பலிகொடுத்தும் வருவதாயும் முழங்கி வருகின்றனர்.

ஆனால் உண்மை பலமுறை முரணாக காணப்பட்டு வருகிறது. Cold-War காலங்களில் ஜனநாயக நாடாக இருந்த இந்தியாவிற்கு எதிராக ஒரு சர்வாதிகார நாடான பாகிஸ்தானை உருவாக்கி அதில் இருந்து இந்தியா நோக்கி குந்தகம் விளைவித்து கொண்டிருந்தது அமெரிக்கா. அப்போது மேற்க்கு நாடுகளின் ஜனநாயக நண்பன் Zia-ul-Haq.

அதேபோல இப்போதும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிரியாவில் ஜனநாயகத்தை நிறுவப்போவதாக கூறி சிரியாவின் கிளர்ச்சியாளர்க்கு ஆயுத, அறிவு, மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இந்த அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் தோளோடு தோள்கொடுத்து மும்முரமாய் முன்னின்று ‘war’ மேல் விழி வைத்து இணைத்து இயங்குவது சவூதி அரேபியா.

சவுதியில் உள்ள ‘ஜனநாயகத்தை’ விட சிரியாவில் மக்களின் அனுபவிக்கும் உரிமைகள் அதிகம். உதாரணமாக சவுதியில் இஸ்லாம் தவிர்ந்த ஏனைய மதம்களுக்கு சட்டப்படி உரிமை இல்லை. ஆனால் சிரியாவில் சட்டப்படி மாற்று மதம்களுக்கு சில உரிமைகளாவது உண்டு.

சிரியாவுக்கு திருத்தம் வேண்டும்தான். ஆனால் அதை சுவுதியில் இருந்தா செய்வது? இங்கு உண்மை என்னவென்றால் இது ஈரானின் முன்னணி நட்பு நாடான சிரியாவை பிரித்தெடுத்து பின் ஈரானை தனிமைப்படுத்தி மத்திய கிழக்கை ஆளும் நோக்கம்தான். இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS