Socialize

இலங்கையில் உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி


பரதன்


கிரிக்கெட் உலக கோப்பை சிறிலங்காவில் செப்டெம்பர் பதினெட்டாம் திகதி (18.09.12) அம்பாந்தோட்டையில் சிறிலங்கா எதிர் சிம்பாவே ஆட்டத்துடன் ஆரம்பமாகின்றது .
பன்னிரண்டு அணிகள் நாலு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் இருபத்தியேழு ஆட்டங்கள் ஆடப்படும்.
பிரிவு ஏ- இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் .
பிரிவு பி- அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து
பிரிவு சி- சிறிலங்கா, தென்னாபிரிக்கா, சிம்பாவே
பிரிவு டி- பாகிஸ்த்தான், நியுசிலாந்து, பங்களாதேஷ்.
இறுதி ஆட்டம் கொழும்பில் நடைபெறும்
சமகாலத்தில் பெண்களுக்கானா இருபது 20 கிரிக்கெட் போட்டிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் பதினைந்து ஆட்டங்கள் எல்லாமே காலியில் நடைபெறும் .
பிரிவு ஏ- அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான்
பிரிவு பி- நியுசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், சிறிலங்கா, தென்னாபிரிக்கா.
இது நாலாவது இருபது ஓவர் உலகக்கோப்பை. தென்னாபிரிக்காவில் 2007 ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக கோப்பையை இந்தியா வென்றது நினைவிருக்கும். பின்னர் 2009 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பையை பாகிஸ்தான் வென்றது. கடைசியாக 2010 இல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இறுதி பந்தயத்தில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்து முதன் முதலாக கிரிகெட் அமைப்பு நடாத்தும் ஒரு பந்தயத்தை வென்றது .

இதுவரை நடந்த மூன்று உலக கோப்பைகளில் சிறிலங்காவை சேர்ந்த மேகல ஜெயவர்த்தனா 615 ரன்கள் எடுத்து முதலிடத்திலும் பீற்றர்சன் இங்கிலாந்து 580 இரண்டாவது இடத்திலும் உள்ளார். பாகிஸ்தானை வீரர்களே முதல் இரண்டு இடத்திலும் அதிக விக்கெட் எடுத்தவர்களாக உள்ளார்கள் சயிட் ஆபிரிட்டி(27) உமார் கல் (26). இதில் உமார் கல் நியுசிலாந்திற்கு எதிரான ஒரு ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுக்களை ஆறு ரன்கள் மட்டும் கொடுத்து வீழ்த்தினார்.

இருபது ஓவர் உலக கோப்பையில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே சதம் அடித்துள்ளார்கள். கிரிஸ் கெயில் (117), சுரேஷ் ரெய்னா(101) மேகல ஜெயவர்த்தனா (100). இதில் கிரிஸ் கெயிலும் சுரேஷ் ரெய்னாவும் தமது சதங்களை தென்னாபிரிக்காவிற்கு எதிராக அடித்தார்கள்.

யுவராஜ்சிங் மீண்டும் கான்சர் சிகிச்சைக்கு பின் இம்முறை களத்தில் இறங்குகின்றார். முதலாவது இருபது ஓவர் உலக கோப்பையில் யுவராஜ்சிங் இங்கிலாந்து வீரர் ஸ்டுவட் புரோட் இன் பந்து வீச்சுக்கு ஒரு ஓவரில் அவர் விளாசித் தள்ளிய ஆறு சிக்சர்களும் இன்னமும் பலர் கண்களில் நிற்கின்றன

தர வரிசையில் தென்னாபிரிக்கா முதலிடத்திலும் இங்கிலாந்து, சிறிலங்கா, இந்தியா என்ற ஒழுங்கில் மற்றைய நாடுகளும் இருந்தாலும் அந்த நேரம் அவர்கள் விளையாடும் தரமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.

இலங்கை காசுக்கு முதல் சுற்று ஆட்டங்கள் 550 ரூபாவிற்கும் இறுதி ஆட்டம் 4950 ரூபாவிற்கும் விற்கின்றார்கள் .ஊரில இருந்திருந்தால் நாங்களும் ஒருக்கா எட்டி பார்த்திருக்கலாம் .

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS