Socialize

ரொறன்ரோவில் திரை விருந்து

சுமதி

செப்டெம்பர் மாதம் 6ம் திகதி தொடக்கம் 16ம் திகதிவரை ரொறொன்டோ நகரம் உலகெங்குமிருந்து வருகை தந்திருக்கும் திரைப்படக் கலைஞர்களால் களைகட்டப் போகின்றது. பொதுவாகக் கனேடியர்கள் ஹொலிவூட் பிரபல்யங்களைப் பார்ப்பதற்கு ரொரொன்டோ மத்திய பகுதிகளில் கூடுவார்கள். இருப்பினும் ஆசியத் திரைப்படங்கள் முக்கியமாக இந்தியத் திரைப்படங்கள் தற்போது மேற்குலகநாட்டுத் திரைப்பட விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதனை மண்டபம் நிறைந்த காட்சிகளாகத் திரைப்படங்கள் திரையிடப்படுவதிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. டானி பொயில். சிலம்டோக் மில்லியனர் எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகவிருக்கலாம்.

இந்த வருடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 37வது ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவில் கவனிக்கப்பட வேண்டிய சில திரைப்படங்களும் காட்சி நேரங்களும்.

1. Him, Here, After (இனி அவன்)
இயக்குனர்: அசோகா ஹாண்டகம
காட்சி நேரமும், திரையரங்குகளும்
Cineplex Yonge & Dundas 9 PM
Monday September 10
TIFF Bell Lightbox 2 3:15 PM
Saturday September 15
TIFF Bell Lightbox 3 9:30 PM

அனைத்தையும் இழந்து வெறும் அவன் ஆகிப் போன பெயரற்ற ஒருவனின் கதை. தனது வாழ்வின் முக்கிய பகுதிகளைப் போரட்டத்திற்காக அர்ப்பணித்த விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவன்ää போர் முடிவிற்கு வந்த பின்னர் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்கின்றான்ää அங்கே அவன் தனது சொந்தங்களாலும்ää சமூகத்தினராலும் நிராகரிக்கப்படுவதனால்ää அவனது எதிர்காலம் எப்படி மாறிப் போகின்றது என்பதனை தமிழ் திரைக்கதையினுாடு திரைக்குக்கொண்டு வந்துள்ளார் சிங்களத் திரைப்பட இயக்குனர் அசோகா ஹண்டகம.

2. Midnight’s Children
இயக்குனர் தீபா மேத்தா
காட்சி நேரங்களும் திரையரங்குகளும்
Sunday September 9
Roy Thomson Hall 6:30 PM

Monday September 10
TIFF Bell Lightbox 2 9:00 AM

சல்மான் ருஷ்டியைத் அறியாத இலக்கியவாதிகள் இருக்க மாட்டார்கள். அவரின் பெயர் போன நாவலைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் தீபா மேத்தா. தீபா மேத்தாவின் Water திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அவரது கடந்த வருடத் திரைப்படமான Heaven on earth இற்குக் கிடைக்கவில்லை. இவ்வருடம் தான் இழந்த பெயரை மீண்டும் பெறும் நோக்கத்துடன் சல்மான் ருஷ்டியின் விருது பெற்ற நாவலைத் திரையாக்கியிருக்கின்றார் தீபா மேத்தா. தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்வாரா என்று படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. Englsigh Vinglish
இயக்குனர் கௌரி சின்டி
காட்சி நேரங்களும் திரையரங்குகளும்

Friday September 14
Roy Thomson Hall 9:30 PM
Saturday September 15
TIFF Bell Lightbox 1 12:15 PM

பல வருடங்களின் பின்னர் திரைக்கு வந்திருக்கின்றார் சிறீதேவி. அமெரிக்காவிற்குக் குடும்பத்துடன் குடிபுகுந்து கொள்ளும் ஆங்கில அறிவற்ற குடும்பப் பெண் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவையாத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் கௌரி. இத்திரைப்படம் ஒரே நேரம் ஹிந்திää தமிழ்ää தெலுங்கு என்று பல மொழிகளில் திரையாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களின் பின்னர் சிறீதேவி திரைக்கு வந்திருக்கின்றார் என்பதைத் தவிரக் குறிப்பிடும் படியாக இத்திரைப்படத்தில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

4.The Reluctant Fundamentalist
இயக்குனர் மீரா நாயர்
காட்சி நேரங்களும் திரையரங்குகளும்
Saturday September 8
Roy Thomson Hall 9:30 PM
Sunday September 9
The Bloor Hot Docs Cinema 11:45 AM
Sunday September 16
Ryerson Theatre 2:30 PM

பாக்கிஸ்தானி எழுத்தாளரான மோசின் ஹமீட் இன் நாவலைத் திரைக்குக் கொண்டு வந்தள்ளார் மீரா நாயர். இஸ்லாமிய முற்போக்கிற்கும், அமெரிக்க முதலாளித்துவத்திற்குமிடையில் அகப்பட்டுக்கொள்ளும் ஒரு இளைஞனின் கதையைத் தளமாக் கொண்டு அமைந்திருக்கின்றது இத்திரைப்படம். சலாம் பொம்பே, காமசுத்ரா தி நேம் ஷேக் போன்ற தரமான திரைப்படங்களால் மிகச் சிறந்த பெண் இயக்குனராக மீரா நாயர் திரைப்பட விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டவர். நிச்சயமாக இவ்வருடமும் அவர் பார்வையாளர்களை ஏமாற்ற மாட்டார் என்றே நம்புகின்றேன்.

37வது சர்வதேச திரைப்பட விழாவில் மேல் குறிப்பிட்ட திரைப்படங்களில் இனி அவன் ஐத் தவிர மற்றைய மூன்று திரைப்படங்களும் Gala Presentations ஆகக் காட்சிக்கு வந்துள்ளன. அதிலும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று பெண் இயக்குனர்களின் திரைப்படங்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன என்பது மிக மிக மகிழ்ச்சியான விடையம்.

இவற்றைத் தவிர கன்னட, ஹிந்தித் திரைப்படங்கள் சிலவும் Contemporary World Cinema வின் கீழ் காட்சிக்காக வந்துள்ளன.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS