Socialize

கனடியத் தமிழ்ப் பேரர்கள்

சுல்பிகா

பெற்றோர்களின் வழக்கமான நாளாந்த பெறுப்புக்களைப் பெறுப்பேற்பதன் முலம் அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒரு உறவுநிலையைப் பேணுபவதாகவே பேரப்பெற்றாரியம் (Grandparenting) நமது கனேடிய தமிழ் சமூகத்தில் நோக்கப்படுகின்றது. ஒவ்வொரு குடும்பத்தினதும் தேவைகளைப் பொறுத்து பேரர்களின் பாத்திரமும் (Roles) பங்களிப்பும் (Contributions) உறவுநிலைத் தொடர்பும் (Relationship attachment) வேறுபட்டதாக குறிப்பாக குழந்தைகளின் சிறுவர்களின் பெற்றார்களால் நிர்ணயிக்கப்படும். இவ்வகையில்ää சிலர் முழு நேரப் பேரப்பெற்றார்களாக உள்ளனர். சிலர் பகுதி நேர சாயங்காலப் பேரப்பெற்றார்களாக உள்ளனர். சிலர் நீண்ட தூரத்தில் இருக்கும் போது தொலைபேசி, e-mail, விடுமுறைக்கால பேரப் பெற்றோர்களாகவும் உள்ளனர்.

பேரர் பெற்றாரியத்தின் விசேட தன்மைகள்
1. குடும்பத்தின் வரலாற்று ஆசிரியராக இருத்தல்
2. விருப்பு விடயங்களைப் புதிய உறவுகளுடன் பகிர்தல்
3. உலகை இளங்கண்களினூடாகக் காணுதல்
4. ஆர்வமுள்ள இளம் மனதுடன் இணைந்து சங்கீதம், வாசிப்பு போன்ற விருப்பங்களை அனுபவித்தல்
5. பேரப்பிள்ளைகளுக்குத் தேவையான உதவிகளையும் ஊக்கங்களையும் வழங்குதல்
6. எல்லாக் குழந்தை விருத்தி நிலைகளையும் கவனத்தோடும் கரிசனையோடும் பார்த்துக் கொள்ளுதல்
7. பெற்றாரால் கொடுக்க முடியாத விடயங்களை வழங்குதல்

வெற்றிகரமான பேரர்பெற்றாரியத்தினைப் பேணுவதற்கு, பேரர்பெற்றறாரியம் செய்வோர்
1. தமது பாத்திரம் பற்றி தெளிவாக இருத்தல்
2. பெற்றார்களுடன் தமது பாத்திரம் பற்றிக் கலந்துரையாடுதல்
3. பிள்ளைகளது பிழையான நடத்தைகள் தொடர்பாக என்ன செய்வது என்பது பற்றி ஒரு உடன்பாட்டுக்கு வருதல்
4. வசதிகள் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளுதல்.

தவிர்த்துக் கொள்ள வேண்டியவை
1. அன்பு காட்டுதல் கரிசனை காட்டுதல், பாதுகாப்பு, நலம் போன்றவற்றில் ஒரே சீராக இருக்க வேண்டும்.
2. ஒரு பெற்றாராக இருப்பதைத் தவிர்த்தல்
3. பேரர்களின் அன்பை வாங்குவதைத் தவிர்த்தல்
4. பேரர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாதிருத்தல்
5. வரையறைகளைப் புறக்கணித்தல்

ஒரு புறத்தில் பேரர்கள் இவ்வாறு குறைபட்டுக் கொள்கிறார்கள்

1. எங்களுக்கு எங்கே என்று நேரம் இருக்கு? பேரர்களின் விஷயங்களைப் பார்த்து முடிக்கவே நேரம் போகிறது. அதோட களைப்பாகிறது. முன்னையப் போல உடம்புக்கும் முடியல. எங்களுக்கு விருப்பம் தான் வெளியில வந்து விடயங்களைத் தெரிஞ்சு கொள்ளää தெரிஞ்சவர்களை கண்டு பேச.

2. பேரர்களை வகுப்பிலிருந்து கூட்டிவர வேண்டும். எங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு. எங்கட பிள்ளைகள் வேலைக்குப் போகிறதால அவர்களுக்கும் கஷ்டம். வீட்டு வேலைகள் எல்லாத்தையும் பார்க்க ஏலாது. நாங்களும் அவர்களுக்கு உதவியா இருக்கத்தானே வேணும்.

3. எங்கள் பேரர்கள் எங்களுடன் அதிகம் பேசுவதில்லை. எங்கட பேச்சு சாப்பாடு எதுவும் அவர்களுக்குப் பிடிக்காது. அது அவர்களுக்கு தரக்குறைவு வெட்கமும் கூட. அது மனதுக்குக் கஷ்டமாயிருக்கும். அதால நாங்களும் அவங்களுடன் அதிகம் பேசுவதில்லை.

4. வுநடநிhழநெ வரும்போது உடனே எடுக்காட்டி அல்லது அவர்கள் வரும்போது கதவை உடனே திறக்கா விட்டால் அப்பா அம்மாவிடம் எங்கள மாட்டி விட்டிடுவாங்கள். கூப்பிட்ட உடனேயே ஓடிப்போகும் போது விழுந்திருவோமோ என்று பயத்தால கொஞ்சம் பிந்திவிடும். பிறகு மருமகள் திட்டிக் கொண்டே இருப்பா. நாள் பூராவும் பாழாகிப்போகும் சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த மாதிரி ஆகிடும். இப்பவெல்லாம் பிள்ளைகள் வளர்ந்திட்டாங்க. நாங்க இருந்தா இதுகளெல்லாம் correct டா நடக்கணும்.

5. கொஞ்ச நாளா எனக்குத் தூக்கமே இல்லை. எனக்கு ஒரே கவலை. அரோராவுக்குப் போனால் இங்க வரமுடியாது. நாங்க வேலைக்குப்போகும் போது குழந்தைகளோட இருக்க யாருமில்லை நீங்கள் வரவே வேண்டும் என்று மகன் அடம் பிடிக்கிறார். அதுகள் என்னோட கதைக்கிறதுமில்லை. ஆனால் காவல் நாய் தேவையாக இருக்குது.

6. எங்களுக்குச் சரியான விருப்பம் எங்கள் பேரர்களின் வாழ்க்கையில பங்காளியாயிருக்க. ஆனா அது அவர்களுக்கும் அவர்கள்ட தாய் தகப்பனுக்கும் பிடிக்காது. நாங்க எங்கட ஆறு பிள்ளைகளையும் வளர்த்து ஆயிரக்கணக்கான பிள்ளைகளயும் எங்ட 35 வருட ஆசிரிய வாழ்க்கையில எவ்வளவு பிள்ளைகளை வளர்த்திருக்கம். இங்கிலிஸ்ல பேசுறதும் கஷ்டமில்ல எங்களுக்கு. ஆனால் அவர்களுக்கு அவ்வளவு கணக்கில்ல.

மறுபறம் பிள்ளைகளும் அவர்களது பெற்றோர்களும் பின்வருமாறு கூறுகின்றனர்.

1. அம்மாம்மா எப்பவும் தொணதொணப்பார். புடிப்பு படிப்பு எண்டு. எனக்கு ஒரே எரிச்சலா இருக்கும்.

2. Friends பத்தியெல்லாம் details கேக்கிறது எனக்குப் பிடிக்கிறதில்லை. அங்க போகக்கூடாது. இங்க போகக்கூடாது. அவர்களோட சேரக்கூடாது இவர்களோட சேரக்கூடாது. என்றெல்லாம் ஒரே advice.

3. எங்கடை பெற்றாரை நாங்கள் இங்க எடுத்ததே பிள்ளைகளைப் பார்க்கவும் எங்களுக்கு உதவிக்கும் தான். அவர்களுக்கும் அதுதானே விருப்பமாக இருக்கும். இங்கை நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்றம். அவர்கள் அவர்கள்ர உல்லாசம் பார்த்தால் நாங்கள் என்ன செய்யிறது.

4. எங்கடை அம்மம்மாவைப் பிடிச்சா நான் எனது request ல சாதிச்சிருவன். ஓரு படியா அவ எனக்காக argue பண்ணி அம்மாவைக் convince பண்ணிருவா. என்னோட அன்புக்காக அவ எதையும் செய்யவா.

பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையில் பேரர்களின் பங்கு என்ன? முதியபேரர்களின் உடல் உள சமூக நலன்கள் கவனத்தில் கொள்ளப்படுகிறதா?

அவர்கள் பாரம்பரிய மானிடச் சொத்தா? குடும்ப வரலாற்று ஆசிரியர்களா?
கூலி பெறாத கூலிகளா? காவல் நாய்களா?;

நீங்களே தீர்மானியுங்கள்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS