Socialize

அடாவடித்தனத்தின் (Bullying) ஆரம்பம் எது?

ஸ்ரீரஞ்சனி

அடாவடித்தனம் என்பது உறவுமுறையில் ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். ஒருவர் தனது அடவாடித்தனத்தை தனது உடலால் சொல்லால் அல்லது செய்கையால் அல்லது அவற்றின் ஏதாவது ஒரு சேர்க்கையால் மற்றவர் மேல் காட்டுகின்றார். இதன் பாதிப்பு குடும்ப உறவுகளில் தொழில்சார் உறவுகளில் சமூகஉறவுகளில் என அனைத்து உறவுகளிலும் காணப்படலாம். பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்துள்ள இந்த வேளையில் அங்கும் அதிகமாக நிகழும் ஒரு விடயமாக இது இருக்கும். ஏதாவது ஒருவகையில் ஒருவரைக் காயப்படுத்தலாம் என்று தெரியும்போது அடாவடித்தனம் செய்பவர் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்கின்றார்.
Dr.Gordon Neufeld என்ற மனோதத்துவ நிபுணர் இந்த அடாவடித்தனத்தின் உருவாக்கத்தை அல்பா பாதுகாப்பு உள்ளுணர்வு (வழிகாட்டலும் வழங்கலும்) பீற்றா தங்கியிருத்தல் உள்ளுணர்வு (பின்பற்றலும் தேடலும்) என்னும் இரண்டு வகையான உள்ளுணர்வுகளின் அடிப்படையிலான ஒரு புதிய கொள்கை மூலம் விளங்கப்படுத்துகின்றார்.
ஒருவருக்கு உதவி தேவையானபோது அல்லது அவரின் தேவையை நிறைவேற்ற இன்னொருவர் அவசியமான போது அவருக்கு வேண்டிய வழிகாட்டலையும் கவனிப்பையும் வழங்க விரும்பும் மற்றைய மனிதரின் அந்த உள்ளுணர்வு அல்பா உள்ளுணர்வு எனப்படுகிறது. இதற்கு உதாரணமாக ஒரு பிள்ளை தனக்கு எட்டாத ஒன்றை எட்டி எடுக்க முயற்சிக்கும் போது நாமாகவே உதவிக்குப் போவதைச் சொல்லலாம்.
குடும்பஅமைப்பில் பொதுவாக பெற்றோர்கள் அல்பா உள்ளுணர்வு உள்ளவர்களாகவும் பிள்ளைகள்ää தங்கியிருக்கும் உள்ளுணர்வு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். நல்லதொரு தாம்பத்திய உறவிலுள்ள கணவனும் மனைவியும் தேவைக்கேற்ப தமது உள்ளுணர்வுச் செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள். வெளிச்சுழலில் ஒருவரின் இந்த உள்ளுணர்வுகள் சுழலின் நிலைமைக்கு ஏற்றபடி மாறும்நிலையில் தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் குறித்த உள்ளுணர்வுக்குள் மட்டும் சிக்கிவிடுபவர்கள் மிகவும் ஆதிக்கம் காட்டுபவர்களாகவோ (அல்பா சிக்கல் உள்ளவர்களாக) அல்லது அளவுக்கு அதிகமாகத் தங்கியிருப்பவர்களாகவோ (தங்கியிருப்புச்சிக்கல் உள்ளவர்களாக) இருக்கிறார்கள்.
பொதுவாக மனிதர்கள் இலகுவில் காயப்படக்கூடியவர்கள். ஒருவருடைய காயப்படக்கூடியதன்மை அவரால் தாங்கமுடியாத அளவுக்கு பாதிக்கப்படும்போது அவருடைய தற்பாதுகாப்பு முயற்சி அவரது மென்மையான உணர்வுகளையும் அதனுடன் தொடர்பான வலிகளையும் உணர்வற்றுப்போகச் செய்துவிடுகின்றது.
இவ்வகையில் தமது மென்மையான காயப்படக்கூடிய உணர்ச்சிகளுக்கும் தேவைகளுக்கும் தற்பாதுகாப்பு அளிக்க அல்பாசிக்கல் உள்ளுணர்வு உள்ளவர்கள் முயலும் போது அல்லது அப்படியான உணர்வுகள் தமக்கு இருப்பதை அவர்கள் ஏற்க மறுக்கும் போது அவர்களுடைய அந்த அல்பா உணர்வு அவர்களைத் தவறான வழிக்கு இட்டுச்செல்கிறது. இது அவர்களின் அடாவடித்தனத்துக்குக் காரணமாகின்றது என்கிறார் Dr. Neufeld.
அவ்வேளைகளில் காயப்படுபவர்களைக் கவனிக்கும் அவர்களுடைய அந்த அல்பா உள்ளுணர்வு. தலைகீழாகி காயப்படுபவர்களைப் பலியாக்கும் உள்ளுணர்வாக மாறிவிடுகின்றது. அதனால் அவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை மிரட்டலாக அவமதித்தலாக அடாவடித்தனமாக மற்றவர்களில் வெளிக்காட்டுகிறார்கள்.
எனவே அடாவடித்தனம் செய்பவரிடம் அவர் உங்களுடைய உணர்ச்சிகளைக் காயப்படுத்துகிறார் என்று மட்டும் ஒரு போதும் சொல்லிப் போடாதீர்கள். அப்படிச் சொல்வது தமது செயல்களுக்கு அவர்கள் ஒரு பலவீனமான இடத்தைக் கண்டுபிடித்து விட்டதாக மட்டுமே அவர்களுக்குச் சொல்லும் என எமக்கு எச்சரிக்கை செய்கிறார் Dr. Neufeld.
அதற்காகää அடாவடித்தனம் செய்பவர்கள் வாழ்க்கை பூராவும் அப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. நாளடைவில் அவர்கள் திருந்தலாம். தமது வாழ்க்கையில் வயதுக்குவந்த ஒருவருடன் ஒரு நிறைவான பிணைப்புக் கொண்டிராமையே அல்பா சிக்கல் உள்ளவர்கள் இலகுவில் புண்பட்டுப் போவதற்குக் காரணம். அதாவது தங்கியிருக்கும் நிலைமையில் அவர்கள் பாதுகாப்பை உணர்வதில்லை ஆனால் அவர்களுக்கு நல்லதொரு உறவு அமைந்தால் அவர்களுடைய இதயங்கள் மென்மையாகி அந்த நிலையிலிருந்து அவர்களை மாற்றிவிடும் என்றும் நம்பிக்கை தருகிறார் Dr. Neufeld.
Dr.Gordon Neufeld ன் கருத்துப்படி
பிள்ளையின் உள்ளுணர்வு அல்பாசிக்கல் நிலையை அடையத்
தூண்டுவன:
1.பெற்றோருக்கு முன் அழமுடியாத நிலை
2.அனுபவித்த பிரச்சனைகளிலிருந்து தப்ப அதுவே தற்பாதுகாப்பு வழி என்ற நினைப்பு
3.பெற்றோர் தன்னைக் கவனிக்க ஏற்றவர்கள் அல்ல என்ற உணர்வு
4.பெற்றோருடனான பலமான பிணைப்பு இல்லாத அல்லது தொலைந்த நிலை
5.தன் கூர்மையான உணர்வுகள் கவனிக்கப்படுவதில்லை என்ற ஏமாற்றம்

அல்பா பெற்றோர் யார்:

1.பிள்ளைகளில் அன்பும் நம்பிக்கையும் உள்ளவர்கள்
2.மிரட்டாமல் எல்லைகளை வகுத்து அதனால் பிள்ளைகளுக்கு வரும் விரக்தியையும் கோபத்தையும் விளங்கிக் கொள்ளக்கூடியவர்கள்
3.சுதந்திரத்தை ஊக்குவிப்பவர்கள்
பலமான பிணைப்பை உருவாக்குபவர்கள்

அல்பா பெற்றோர் அல்லாதவர் யார்:

1.பிள்ளைகளைத் திருத்த முடியாது எனக் கைவிடுபவர்கள்
2.பிள்ளை கோபத்தில் சொல்பவை தன்னைத் தாக்குவதற்காகத் தான் என நினைப்பவர்கள்
3.தானும் பாதிக்கப்பட்டவர் அல்லது பிள்ளைக்குச் சமமானவர் எனச் செயற்படுபவர்கள்
4.பிள்ளைகளுக்குத் தண்டனை கொடுப்பவர்கள்
5.பிள்ளை கேட்டதெல்லாம் செய்பவர்கள்

பிள்ளைகளுடன் பலமான பிணைப்பை எப்படி உருவாக்கலாம்?

1.பிள்ளை கதைக்கும்போது அவரின் கண்ணைப் பாருங்கள்.அவர் சொல்வதை உங்கள் இதயத்தாலும் காதாலும் கேளுங்கள்
2.தாம் கவனிக்கப்படுகிறார்கள் என்பதை பிள்ளைகள் உணரக்கூடியதாக அவர்களுடன் கதையுங்கள்ää சேர்ந்து ஒரு செயலைச் செய்யுங்கள்
3.பிள்ளைகளுடன் விளையாடுவதன் மூலம் அவர்களின் உலகத்தில் உங்களையும் இணையுங்கள்
4.பிள்ளைகளின் வழிகாட்டியாகவும் ஆதாரமாகவும் இருங்கள்
பிள்ளைகளை முடியுமான அளவுக்கு இறுகத் தழுவுங்கள்

உசாத்துணை:
http://www.parentscanada.com
http://www.mamacompass.com

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS