Socialize

Apple கிளைகளைப்போல் புதிய Microsoft கிளைகள்

இளவழகன்

Apple நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்திவரும் Apple விற்பனை நிலையக்களைப்போல் Microsoft நிறுவனமும் தனது விற்பனை நிலையங்களை 2009 இல் இருந்து நிறுவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் Microsoft தனது முதலாவது நிலையத்தை Toronto இல் உள்ள Yorkdale Mall இல் நிறுவ உள்ளது. இந்த வருட இறுதிக்குள் Yorkdale Mall 40 புதிய கடைகளை இணைக்கும் என்று அறியப்படுகிறது.

இன்று சுமார் 370 Apple விற்பனை நிலையங்கள் 13 நாடுகளில் உள்ளன. இவை அனைத்தும் Apple இன் உரிமையுடன் நிருவகிகப்பட்டு வருபவை. இவற்றில் 250 அமெரிக்காவிலும், 33 இங்கிலாந்திலும், 23 கனடாவிலும், 14 ஆஸ்திரேலியாவிலும், 5 சீனாவிலும் ஏனையவை மற்றும் சில நாடுகளிலும் உள்ளன.

இக்கிளைகளில் Apple சம்பத்தபட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் இந்த விற்பனை நிலையங்கள் வருடம் ஒன்றுக்கு $16 பில்லியன் பொறுமதியான பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த விற்பனை நிலையங்கள் தோல்வியை தழுவும் என எதிர்பார்கப்பட்டலும் Apple அதை முறியடித்தது. Apple விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு சதுர அடிக்கும் சுமார் $3085 ஐ வருமானமாக எடுத்தது. Apple உடன் ஒப்பிடக்கூடிய Best Buy நிறுவனம் சதுர அடிக்கு $930 ஐயே வருடம் ஒன்றுக்கு வருமானமாக எடுத்தது. அத்துடன் Apple கிளைகளுக்கு வராவாரம் சுமார் 17,000 நுகர்வோர் வரவு செய்கின்றனர்.

அனால் Apple கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட Microsoft சுமார் 20 விற்பனை நிலையங்களை மட்டுமே அமெரிக்காவில் தற்போது கொண்டுள்ளது. இவை அனைத்தும் Microsoft இன் உரிமையுடன் இயங்குகின்றன. இதன் முதலாவது விற்பனை நிலையம் Scottsdale, Arizona இல் நிறுவப்பட்டது. இன்னும் சில வருடங்களில் Microsoft விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 75 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் அப்பால் Puerto Rico இலும் கிளையை ஆரம்பிக்கிறது. Microsoft கிளைகள் அமைப்பிலும் அளவிலும் Apple கிளைகளை ஒத்திருக்கும்.

Microsoft கிளைகள் இதன் தயாரிப்புக்களை பாவிக்கும் Acer, Dell, HP, Lenovo, Sony போன்ற பொருட்களையும் Windows, Office, XBox 360 போன்ற Microsoft தயாரிப்புகளையும் விற்பனை செய்கிறது. அத்துடன் Windows இல் இயங்கும் smart-phone களும் இங்கு விற்பனை செய்யப்படும். இக்கிளைகளில் Microsoft சம்பந்தப்பட பயிற்சிகளும் வைரஸ் விலக்கல் போன்ற சேவைகளும் வழங்கப்படும்.

Apple விற்பனை நிலையங்களைப்போல் Microsoft விற்பனை நிலையங்களும் இலாபகரமானதக இருக்குமா என்பதை காலம்தான் சொல்லும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS