Socialize

Ethiopian Airlines இன் Boeing 787 Dreamliner சேவை இன்றுமுதல்

இளவழகன்

Boeing என்ற அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனத்தின் புதிய தயாரிப்புத்தான் 787 Dreamliner. இந்த நடுத்தர அளவு விமானம் 210 இல் இருந்து 290 பயணிகளை கொள்ளக்கூடியது. மற்றைய விமாங்களைவிட இது ஒரு விடயத்தில் முற்றிலும் வேறுபட்டது. ஏனைய விமானக்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கும் வேளை Boeing 787 விமானத்தின் பெருமளவு பாகங்கள் carbon fiber composite இனால் செயப்படவை. Boeing 767 இனுடன் ஒப்பிடுகையில் இந்த விமானம்கள் 20% குறைந்த அளவு எரிபொருளை பயன்படுத்தும் என்று உத்தரவாதம் அளித்தது. இதற்க்கு சில காரணம்கள் உண்டு.

முதலாவது இது அலுமினியத்தால் செய்யப்பட்ட விமானக்களை விட மிகவும் பாரம் குறைந்தது. இந்த விமானம் 50% composite ஐயும், 20% அலுமினியத்தையும், 15% titanium ஐயும், 10% இரும்பையும், 5% ஏனைய பொருட்களையும் கொண்டது. பாரம் குறைந்ததால் எரிபொருள் பாவனையும் குறைத்துள்ளது. இந்த விமானக்கள் பராமரிப்பு செலவுகளையும் குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது இதன் உடல்பாகம் பல அடி நீள வளைய தனித்துண்டுகளால் (one-piece barrel) செய்யப்பட்டது. இந்த பாரிய வளைய துண்டுகள் அனாவசியமான இணைப்பு துண்டுகள் மற்றும் இணைப்பு ஆணிகள் போன்றவையை தவிர்க்கின்றன. இதனால் பாரமும் குறைந்து வளியினால் ஏற்படும் உராய்வும் அதிகளவில் குறைகிறது. ஏனைய விமானங்கள் சிறிய அலுமினிய துண்டுகளை இணைத்து செய்யப்படுவதால் பாரமும் கூடி உராய்வும் கூடுகிறது.

இந்த விமானத்தை முதலில் பாவித்த ஜப்பான் நாட்டின் ANA (All Nippon Airways) தனது Tokyo-Frankfurt பிரயாணத்தின் போது 21% எரிபொருளை சேமித்ததாக கூறியது. அந்த சேமிப்பு மேலும் 5400 Km பறக்க போதியது. Japan Airlines இந்த விமானத்தை சேவையில் ஈடுபடுத்தும் இரண்டாவது விமானசேவை நிறுவனமாகும்.

இந்த விமானத்தை சேவையில் பயன்படுத்தும் மூன்றவது விமான நிறுவனம் Ethiopian Airlines ஆகும். இந்த விமான சேவை தனது முதலாவது 787 பயணத்தை இன்று (August 18, 2012) அமெரிக்க Dulles விமான நிலையத்தில் இருந்து எதியோப்பியாவுக்கு பறப்பதன் மூலம் ஆரம்பிக்கிறது.

இதேவேளை Air India வும் சில 787 களை கொள்வனவு செய்கிறது என்றாலும் அவை பாவனைகுட்படுதுவது பல காரண்ங்களால் இழுபட்டு செல்கிறது.

இந்த விமானக்கள் பெரிய அளவிலான window களையும் கொண்டுள்ளது குறிபிடத்தக்கது. இதுவரை சுமார் 860 இவ்வகை விமானங்க்களை கொள்வனவு செய்ய விமான சேவை நிறுவனக்கள் விருப்பு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் பாவனைக்கு அறிமுகப்படுத்திய காலத்திலேயே ஐரோப்பிய Airbus நிறுவனம் தனது Airbus380 ஐ அறிமுகப்படுத்தியிருந்தது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS