பூபாளம் http://www.boobalam.com இருளிலிருந்து ஒளிக்கு... Mon, 16 Sep 2013 01:26:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=4.4.11 பூபாளம் மாத இதழின் 18வது இதழ் http://www.boobalam.com/boobalam18th-issue/ http://www.boobalam.com/boobalam18th-issue/#comments Mon, 16 Sep 2013 01:16:23 +0000 http://www.boobalam.com/?p=1625 பூபாளம் மாத இதழின் 18வது இதழை இந்த இணைப்பில் பார்வையிடலாம்

]]>
http://www.boobalam.com/boobalam18th-issue/feed/ 3
பூபாளம் மாத இதழின் 17வது இதழ் http://www.boobalam.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-17%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a4/ Thu, 12 Sep 2013 16:30:15 +0000 http://www.boobalam.com/?p=1609 பூபாளம் மாத இதழின் 17வது இதழை இந்த இணைப்பில் பார்வையிடலாம்

]]>
யாழ்.பல்கலைக் கழகச் சம்பவங்கள் தோற்றுவித்துள்ள தொடர் போராட்டங்கள். http://www.boobalam.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/ http://www.boobalam.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comments Mon, 03 Dec 2012 20:13:33 +0000 http://www.boobalam.com/?p=1604

யாழ்.பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளரான ப.தர்ஷானந், கலைப்பீட மாணவ ஒன்றியத் தலைவர் க.ஜென மேனன், மருத்துவ பீட மாணவன் சுதர்சன், விஞ்ஞானபீட மாணவன் எஸ்.சொலமன் ஆகியோரே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சளார் பிராச்ந்த ஜெயக்கொடி “பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அவர்களுக்கு 72 மணி நேரம் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்திருக்கிறார்.

மாணவர்களின் கைது தொடர்பாக முன்னர் கருத்து வெளியிட்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சளார் திருநெல்வேலியிலுள்ள “சிறிரெலோ” கட்சியின் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதல் மற்றும் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டியமை என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்யதுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவுக்க அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்க உட்படத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். கடந்த புதன் கிழமை திருநெல்வேலியிலுள்ள சிறிரெலோ காரியாலயம் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தன்று மாணவர்கள் சுடரேற்றலாம் என அறிந்த பாதுகாப்பு தரப்பினர் பெருமளவு படையினரை அங்கு குவித்திருந்ததுடன் பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ஆனால் குறித்த நேரத்தில் பெண்கள் விடுதியிலும் வேறு இடங்களிலும் சுடரேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாதுகாப்பு படையினர் அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் மறுநாள் அமைதிவழிப் போராட்டத்தினை பல்கலைக்கழக வளாகத்திளுள் நடாத்தியதுடன் பிரதான வாசலூடாக வீதிக்கு நுழைந்த போது பாதுகாப்பு படையினர் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அதனால் சில மாணவர்கள் காயமடைந்ததுடன் ஏனைய மணாவர்கள் சிதறியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு நின்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சளார் பிரசாந்த ஜெயக்கொடி, “யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதன் பின்பு மாணவர்கள் குழப்பம் விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வீதிகளில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டனர். இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு நிலைமையை சுமுகமாக்கினர். இவ்விடயத்தில் இராணுவம் தலையிடவில்லை.” எனக் கூறியிருக்கிறார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவங்களை அடுத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் பல்கலைக்கழக ஊழியர்களும் அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்திலும் அரை நாள் பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டதுடன் இராணுவம் பல்கலைக்கழக சூழலில் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பியும் வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் குறித்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்ற பொலிஸார் அவர்களைக் கைது செய்து விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு சென்றதுடன் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டும் வருகிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை பயங்கரவாதப் புலானாய்வுப் பொலிஸார் விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.பல்கலைக்கழக சம்பவங்களுக்கு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்ததுடன் தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுமிருந்தார்கள். மனித உரிமை அமைப்புக்களும் ஊடக சுதந்திரத்திற்கான அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்திருந்தன.

யாழ்.பல்கலைக்கழக சம்பவங்களை அடுத்து> நாளை செவ்வாய்க்கிழமை (04.12.2012) தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் ஊடகவியலாளர் மாநாட்டில் “மாணவர்களினதும் பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தலையிடக் கூடாது எனக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் த.தே.கூட்டமைப்பினரும் இணைந்து செயற்படுவார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கடந்த 27 ஆம் திகதி இராணுவத்தினரும் பொலிஸாரும் பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறி பிரவேசித்து பல்கலைக்கழக மாணவர் மாணவியர்களைத் தாக்கியுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய அமைதியான செயற்பாட்டை குழப்பியதுடன்> கண்மூடித்தனமாகத் தாக்கியும் உள்ளனர். அத்துடன் இந்தச் சம்பவங்களைப் பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கடமைகளைச் செய்ய விடாது தடுக்கப்பட்டார். செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதனைக் கண்டிக்குமுகமாக அமைதியான போராட்டத்தினை நடாத்தவதெனத் தீர்மானித்தோம் எனவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் “கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் நாம் கோருகின்றோம்” எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இவ்விடயம் குறித்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேச்சந்திரன் பத்திரிகைக்கு வழங்கிய விசேட பேட்டியில் “இறந்த ஆத்மாக்களுக்கு குறித்த தினத்தில் விளக்கேற்றி மரியாதை செலுத்தக்கூட முடியாத அளவுக்கு ஜனநாயகம் பறிக்கப்பட்டு இராணுவ அடக்குமுறைக்குள் வடக்கு கிழக்கு மக்கள் வாழுகின்றார்கள் என்பதற்கு அடையாளமாகவே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா. சபை பிரதிநிதிகளிடம் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டியிருக்கிறோம்” எனத் தெரவித்திருக்கிறார்.

த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ் மா அதிபருடன் தொடர்ப கொண்டு மாணவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். த.தே.கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குடாநாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும்> யாழ்.பல்கலைக்கழ மாணவர் ஒன்றியம் காலவரையறையற்ற வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருக்கிறது. தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவுப் போராட்டங்களை நடாத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.boobalam.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/feed/ 11
பூபாளம் பதின்முன்றாம் இதழ் http://www.boobalam.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/ http://www.boobalam.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/#comments Mon, 03 Dec 2012 20:06:45 +0000 http://www.boobalam.com/?p=1600 பூபாளம் பதின்மூன்றாம் இதழ்

இந்த இணைப்பில் கிளிக்குவதன் மூலம் முழுப் பிரதியையும் பார்வையிட முடியும்,

பூபாளம் இதழ் 13

]]>
http://www.boobalam.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/feed/ 1
வடக்கில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். – பொது எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை. http://www.boobalam.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87/ Tue, 27 Nov 2012 15:20:24 +0000 http://www.boobalam.com/?p=1596 தாயகத்திலிருந்து விஜய்

வடக்கில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் வர்த்தமானி அறிவித்தல் இன்றியும் முறையான நடவடிக்கைகளின் அடிப்படையிலும் சேர்த்தக் கொள்ளப்படவில்லை. எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேவையெனின் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக உரிய முறைகளைப் பின்பற்றி தமிழ்ப் பெண்கள் விரும்பினால் அவர்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ந.குமரகுருபரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் “பொது எதிர்க்கட்சிகளின் கூட்டு” நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ந.குமரகுருபரன் இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். அத்துடன் பொது எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
செய்தியாளர் மாநாட்டில் பேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ந.குமரகுருபரன், கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அப்பாவி தமிழ் பெண்கள் எந்தவிதமான முறைமைகளும் பின்பற்றப்படாமல் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் பின்னர் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று முன்னர் கூறப்பட்ட போதும், தற்போது பலவந்தமாக இராணுவத்தில் நேர்க்கப்படுகின்றனர். முன்னர் கைது செய்யப்பட்ட போது அழுத பெற்றோர் தற்போதும் அழுதுகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் மாநாட்டில் குமரகுருபரன் தொடர்ந்து பேசுகையில், இந்த பெண்கள் அழுதுகொண்டிருந்த நிலையில் இழுத்தச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அல் ஜசீரா கேள்வி எழுப்பியுள்ளது. அதற்குப் பெற்றோரை விட்டுப் பிரிவதால் இந்தப் பெண்கள் அழுததாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறாயின் பெற்றோரைப் பிரிய வரும்பாத பெண்களை ஏன் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடக்கில் பெண்கள் எந்த விதமான முறையும் பின்பற்றப்படாமல் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவில்லை. வீடுகளுக்குச் சென்று அழுத்தம் கொடுத்தே சேர்த்துள்ளனர். அத்துடன் அவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் என்ன சேவைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கேட்கிறோம். இது சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் சிலர் தப்பியோடியதாகவும், அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட செய்திகள் உண்மையற்றவை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருப்பதுடன், இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களில் 6 பேர் சுய விருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகக் கூறி அதிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும், அவர்கள் ஒரு நாள் வரை தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அலுவலகப் பணிகளுக்காகவும் கணனிப் பயிற்சிகளுக்காகவும் எனக் கூறப்பட்டு பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும் ஆனால் பின்னர் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்ற தெரிய வந்ததனால் அந்தப் பெண்கள் விலகக் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

]]>
ஐ.நா.வின் உள்ளக அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள் பாரதூரமான கரிசனக்குரியவை. – இலங்கை வெளிவிவாகர அமைச்சு அறிக்கை வெளியிட்டது. http://www.boobalam.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/ Sun, 25 Nov 2012 04:33:54 +0000 http://www.boobalam.com/?p=1592 “அறிக்கையில் எழுப்பப்பட்டிருக்கும் சில விவகாரங்கள் இலங்கையின் பாரதூரமான கரிசனைக்குரியவையாகக் காணப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெற்றி அறிக்கை தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நேற்று (23 வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ]]> தாயகத்திலிருந்து விஜய்

ஐ.நா. அதிகாரிகளால் நவம்பர் 14 ஆம் திகதி கசியவிடப்பட்டதும் பின்னர் அன்றைய தினமே உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதுமான இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதம் தொடர்பிலான “உள்ள மீளாய்வு அறிக்கை”(பெற்றி அறிக்கை) தொடர்பில் இலங்கை வெளிவிவாகர அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்> “அறிக்கையில் எழுப்பப்பட்டிருக்கும் சில விவகாரங்கள் இலங்கையின் பாரதூரமான கரிசனைக்குரியவையாகக் காணப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெற்றி அறிக்கை தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நேற்று (23 வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றி அறிக்கை ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டமை> அறிக்கையின் நேர்மை. அறிக்கையின் சில பகுதிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிக்கை தொடர்பான இலங்கை அராசங்கத்தின் எதிர்ப்பை இலங்கையின் ஐ.நா சபைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஊடாக ஐ.நா.செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்> தருஸ_மன் அறிக்கையும்> பெற்றியின் அறிக்கையும் ஐ.நா.விற்கான உள்ளக ஆலோசனைகளை வழங்குபவையாகும். தருஸ_மன் அறிக்கையும் ஆரம்பத்திலேயே கசியவிடப்பட்டிருந்தது. இப்போது பெற்றி அறிக்கையும் அவ்வாறே கசியவிடப்பட்டிருக்கிறது. இந்த விடயமானது ஆவணத்தின் உன்மைத்தன்மை பற்றிய கேள்வியை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்> இந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதை இலங்கை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் அறிக்கையில் எழுப்பப்பட்டிருக்கும் சில விவகாரங்கள் இலங்கையின் பாரதூரமான கரிசனைக்குரியவையாகக் காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன்> அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட சில கீழ்மட்ட ஐ.நா. அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கொண்டவையாக தருஷ_மன் அறிக்கை மேற்கோள் காட்டியிருந்த விடயங்களே பெற்றியின் அறிக்கையில் காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்> இந்த அறிக்கையானது தருஷ_மன் அறிக்கையின் ஆதாரமற்ற நம்பகத்தன்மையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அங்கீகாரமளிப்பதற்கு முயற்சிக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டுக்கள் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பான எண்ணிக்கை தொடர்பானவை எனவும் வடக்குக்கான உணவு மற்றும் மருந்து வகைகள் உரிய முறையில் அனுப்பப் படவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றுமொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை> புலிகள் பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்> இந்த அறிக்கையானது உறுப்பு நாடுகளை விமர்சிப்பதாக அமைந்துள்ளது. ஐ.நா.வானது அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பு என்பதும் அதன் உறுப்பினர்கள் சமத்துவமான இறைமையும் கௌரவத்தையும் கொண்டவர்கள் என்பதையும் மறந்து விட்டதாக தென்படுகிறது. தமக்கு வழங்கப்பட்ட ஆணை மற்றும் சாசனத்தின் பிரகாரம் இந்த அறிக்கையைத் தயாரித்தவர் செயற்பட வேண்டுமென நாங்கள் நினைவூட்டுகிறோம் எனவும் இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் பெற்றி அறிக்கை தொடர்பில் விசனத்தை வெளியிட்டிருக்கிற போதும் சர்தேச தலைவர்கள் மற்றும் அமைப்புக்கள்> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் இலங்கை அரசாங்கத்தினை குற்றம் சாட்டியிருக்கின்றன.

இதேவேளை, இன்னசிற்றி பிரஸ். “இலங்கை விவகாரத்தில் தோல்வி கண்டிருக்கும் நிலையிலும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை இடுவதை தடை செய்யும் ஒழுங்கு விதிகளை ஐ.நா.கொண்டிருப்பதாக” தெரிவித்திருக்கிறது.

]]>
கண்டனங்கள், கோரிக்கைகள் மத்தியில் பிரதம நீதியரசருக்கெதிரான குற்றவியல் பிரேரணை விசாரணை ஆரம்பம். http://www.boobalam.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Sun, 25 Nov 2012 04:29:59 +0000 http://www.boobalam.com/?p=1588 தாயகத்திலிருந்து விஜய்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா சமூகமளித்தார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, இன்று அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்னிலையில் ஆஜாரனார். இன்று (23.11.2012 வெள்ளிக் கிழமை) காலை 10.30 அளவில் பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் ஆரம்பமான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முதலாவது அமர்விற்கு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, சட்டவுரைஞர்கள் சகிதம் சமூகமளித்தார்.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றிவியல் பிரேரணை தொடர்பில் உள்ளுர் மற்றும் சர்வதேச தலைவர்களும் அமைப்புக்களும் கண்டனங்கள் முன்வைத்து வரும் நிலையில், விசாரணைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று (23.11.2012)கூடியதுடன், அதன் முன்னிலையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா ஆஜாராகியுமிருந்தார்.
பல்வேறு சமூகப் பிரமுகர்களால் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளிக் கருத்துக்களத்தின் சார்பில் இக் குற்றப் பிரேரணை தொடர்பாக ஜயந்த தனபால் மற்றும் பேராசிரியர் சாவித்திரி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “உயர்நீதி மன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட வழக்குகளில் தனது நிகழ்ச்சித் திட்டத்திற்கு இசைவான தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம் அந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பத்திரத்தை தாக்கல் செய்வது நல்லாட்சியின் முக்கிய கொள்கையை மீறும் நடவடிக்கை” எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலத்திலும் தற்போதும் பிரதம நீதியரசர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கியிருப்பதுடன், அண்மைக்காலத்தில் நீதித்துறை மீது இடம் பெற்ற தாக்குதல்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பதுடன், “இவ்விடயங்கள் யாவுமே முக்கியத்தவம் வாய்ந்தவை என்பதுடன், எமது நாட்டில் நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய கரிசனை கொண்டுள்ள யாரேனும் ஒருவரினால் உதாசீனம் செய்யப்படவும் முடியாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் பிரேரணையை விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ரிட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேன்முறையீட்டு நீதிமன்றம் அம்மனுக்களை உயர்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தியிருந்தது. இந்த மனுக்களை நேற்று (22.11.2012) விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நிமல் காமினி அமரதுங்க, கே. சிறிபாலன், பியாஷட் டீப் ஆகியோர், “குற்றப்பிரேரணை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரும் வரையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணைகளை தாமதப்படுத்துவது நல்லது” என்று பாராளுமன்றத்திற்கு பரிந்துரை செய்திருந்தார்கள்.
அத்துடன் உயர்நீதிமன்றம் “சட்ட மன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய இரு நிறுவனங்களின் தனித்துவம் மற்றும் கௌரவத்தைபாதுகாக்கும் வகையில் நாளை நடைபெற இருக்கும் தெரிவுக்குழுவின் விசாரணையை இடைநிறுத்துவது நல்லது” என்றும் பரிந்துரைத்திருந்தது.
ஆயினும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நேற்று மாலை (22.11.2012), உயர் நீதிமன்றப் பரிந்துரைகள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை நேற்றுச் சந்தித்து, குற்றப்பிரேரணை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தார்கள். ஆயினும் சபாநாயகர், குற்றப் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் குற்றப்பிரேரணையை மீள்பரிசீலனை செய்ய முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இத்தகையதொரு நிலையிலேயே இன்று பிரதம நீதியரசரக்கெதிரான விசாரணையை மேற்கொள்ளும் பாராளுமன்றத் தெரிவுக்குழு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியது.
கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு புறப்பட்ட பிரதம நீதியரசர், மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டே சென்றார். ஆயினும் அங்கு கூடியிருந்த சட்டத்தரணிகள் மற்றும் பொது மக்கள் பிரதம நிதியரசரை நோக்கி “வாழ்க”(ஜெயவேவா) எனக் கோசமிட்டதுடன், பின்னர் குற்றப் பிரேரணைக்கு எதிரான அர்ப்பாட்டத்தலும்; ஈடுபட்டனர்.
பிரதம நிதியரசர் பாராளுமன்றக் கட்டத் தொகுதிக்குச் சமூகமளித்த வேளை, பிரதம நீதியரசர் விசாரணை நடைபெற்ற பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்னிலையில் ஆஜாரிகிவிட்டு வெளியே வந்த பிரதம நீதியரசர் ஊடகயிவலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுமில்லை.
மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக் குழு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுகிறது.

]]>
பூபாளம் பன்னிரண்டாம் இதழ் http://www.boobalam.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4/ Sun, 25 Nov 2012 04:24:23 +0000 http://www.boobalam.com/?p=1579 பூபாளம் பன்னிரண்டாம் இதழ்

இந்த இணைப்பில் கிளிக்குவதன் மூலம் முழுப் பிரதியையும் பார்வையிட முடியும்,

பூபாளம் இதழ் 12

]]>
பூபாளம் பதினோராவது இதழ் http://www.boobalam.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/ Sun, 25 Nov 2012 03:47:27 +0000 http://www.boobalam.com/?p=1569 பூபாளம் பதினோராவது இதழ்

இந்த இணைப்பில் கிளிக்குவதன் மூலம் முழுப் பிரதியையும் பார்வையிட முடியும்,

பூபாளம் இதழ் 11

]]>
பூபாளம் பத்தாவது இதழ் http://www.boobalam.com/10th-issue/ Sun, 25 Nov 2012 03:40:51 +0000 http://www.boobalam.com/?p=1564 பூபாளம் பத்தாவது இதழ்
பூபாளம் பத்தாவது இதழ்
இந்த இணைப்பில் கிளிக்குவதன் மூலம் முழுப் பிரதியையும் பார்வையிட முடியும்,

பூபாளம் இதழ் 10

]]>