hotmail.com, @msn.com , @live.com போன்ற இலவச emailகளை வழங்கி வந்த Microsoft இப்போது அவற்றுக்கு பதிலாக @outlook.com என்ற email முகவரியை அறிமுகப்படுத்துகிறது. உடனடியாக உங்கள் பெயரை கொண்ட @outlook.com email முகவரியை (yourname@outlook.com) எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிடில் வேறொருவர் அதை உங்களுக்கு முன் எடுத்துகொள்வர்."/>

Socialize

Hotmail.com இற்கு பதிலாக புதிய outlook.com ஈமெயில்

இளவழகன்
இதுவரை @hotmail.com, @msn.com , @live.com போன்ற இலவச emailகளை வழங்கி வந்த Microsoft இப்போது  அவற்றுக்கு பதிலாக @outlook.com என்ற email முகவரியை அறிமுகப்படுத்துகிறது. உடனடியாக உங்கள் பெயரை கொண்ட @outlook.com email முகவரியை (yourname@outlook.com) எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிடில் வேறொருவர் அதை உங்களுக்கு முன் எடுத்துகொள்வர்.

புதிய outlook.com உங்களின் Facebook , Tweet ஆகியவைகளுடன் தொடர்பு ஏற்படுத்த முடிந்தது மட்டுமல்லாது chat , video தொலைபேசி வசதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன்  இது மற்றைய email தொடர்புகளில் இருந்து உங்களின் email பட்டியலையும், calendar பதிவுகளையும் தானாகவே எடுத்து கொள்ளும் வசதி கொண்டது. எதிர் காலங்களில் இது Microsoft Office இன் மட்டுபடித்திய சேவைகளை (cloud-based MS Word , MS Excel) தரவும் கூடும். இந்த வசதிகள் எல்லாம் இருந்தாலும் நீங்கள் உங்களை பற்றிய தகவல்களை பாதுகார்க்க விரும்பின் முற்றிலும் புதியதோர் email முகவரியை எடுத்துக்கொள்வது சாணக்கியம்.

உங்கள் விபரங்களையும்  (subject, name, place) கடித உள்ளடக்கங்களையும் (content) அறிந்து அதற்கு ஏற்ப விளம்பரம் போடும் ஆவல் கொண்ட Gmail, உங்கள் email இன் உள் அடக்கங்களையும் இலத்திரனியல் முலம் வசிப்பது வழக்கம். அனால் outlook.com உங்கள் கடித தலைப்பை (subject) மட்டுமே வசிக்கும் எனவும் கடித உள்ளடக்கத்தை வாசிக்க மாட்டாது எனவும் Microsoft தெரிவிக்கிறது.

Hotmail 1996 இல் இந்தியாவில் பிறந்து அமெரிக்கர் ஆகிய Sabeer Bhatia இனாலும் Jack Smith இனாலும் கலிபோனியாவில் தொடங்கப்பட்டது. பின்னர் இன் நிறுவனம் microsoft இற்கு $400 மில்லியன் இற்கு 1997 இல் விற்கப்பட்டது. மொத்தம் 36 மொழிகளில் email முகவரிகளை வழங்கும் hotmail சுமார் 325 மில்லியன் உறுப்பினர்களை கொண்டது.

Hotmail சேவைக்கு போட்டியாக Google gmail , Yahoo போன்றனவையும்  இலவச email சேவையை வழங்குகின்றன. மாதாந்தம் Hotmail 324 மில்லியன் உறுப்பினர் பாவனையையும்  Yahoo 290 மில்லியன் உறுப்பினர் பாவனையையும் Gmail 278 மில்லியன் உறுப்பினர் பாவனையையும் கொண்டுள்ளன என ComScore என்ற கணிப்பு நிறுவனம் கூறுகிறது. இந்த கணிப்பு கணணி பாவனையை மட்டுமே அடிப்படையாக கொண்டது, smart-phone பாவனையை உள்ளடக்கவில்லை.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS