Socialize

iPad இன் கோட்டையைத் தகர்க்க வரும் கூகிளின் நெக்சஸ் கணி பலகை


ஜோர்ஜ்

கூகிளின் Android செயலி பல்வேறு கணிபலகைகளில் பயன்படுத்தப்படுகிறது. கணி பலகைச் சந்தையின் முடி சூடா மன்னனான அப்பிள் நிறுவனத்தின் iPad கணி பலகைக்கு போட்டியாக வந்த பல்வேறு கணி பலகைகளால் பெருமளவில் நுகர்வோரின் ஆதரவைப் பெற முடியவில்லை. Sony, Samsung, Acer, Asus, Toshiba, Lenovo என பல்வேறு பெரிய நிறுவனங்களால் அப்பிளின் செல்வாக்கை உடைக்க முடியயவில்லை.


அப்பிளின் கணிபலகைத் திரை பத்து அங்குலங்கள் இருப்பதாலும், அப்பிள் 7 அங்குலத் திரைக் கணிபலகைகளை வெளியிட இதுவரை மறுத்து வருவதாலும் கூகிள் இந்த வகை கணிபலகையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 400 டொலர் விற்கும் iPad இற்கு போட்டியாக, 200 டொலர் கணிபலகைகளை கூகிள் தற்போது விற்கிறது. ஏசஸ் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்த இந்த கணிபலகைகள் Google Play விற்பனை நிலையத்தில் படங்கள், பாடல்கள், புத்தகங்களை வாங்க வழி செய்கிறது. அத்துடன் சுமார் 6 லட்சம் குறுஞ் செயலிகளையும் நீங்கள் வாங்கி தரவிறக்கம் செய்ய முடியும்.

அதையும் விட ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகளை செயற்படுத்த முடியும். (Multi-tasking) அப்பிள் iOS செயலி போலன்றி, கூகிள் அன்ட்ரோய்ட் செயலியை நீங்கள் விரும்பிய முறையில் நீங்கள் மாற்றி கணிபலகையின் முகப்பை வடிவமைக்க முடியும்.

பளிச்சிடும் வண்ணங்களை காட்டக் கூடிய நவீன திரையுடன் உள்ள இந்த கணிபலகை, அகலமான பார்வைக் கோணம் உடையது. இதனால் அருகில் உட்கார்ந்திருக்கும் இருவர் இந்தக் கணிபலகையைப் பார்க்க முடியும். இதன் மின்கலத்தின் வாழ்வுக் காலமும் ஒப்பீட்டளவில் அதிகமானது.

ஆனால் மற்ற விலையுயர்ந்த கணிபலகைகள் போலன்றி, நீங்கள் தொலைபேசி இணைப்பு மூலமாக இணையத் தொடர்பை ஏற்படுத்த முடியாது. wi-fi இணைப்பு மூலமாகவே பயன்படுத்த முடியும். எனவே வீட்டுக்கு வெளியில் பாவிப்பதாயின் இந்த இணைப்பு அவசியம்.

அத்துடன் முன்பக்கத்தில் மட்டுமே ஒளிப்பதிவுக் கருவி பொருத்தப்பட்டதால், தொலைபேசும் இணைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். திரையில் பார்த்துக் கொண்டே வீடியோக்களையோ, படங்களையோ எடுக்க முடியாது.

அத்துடன் தொலைக்காட்சியுடனோ, பெரிய திரைகளுடனோ இணைப்பதற்கான HDMI இணைப்பு இல்லை. 8,16 GB Memory இருந்த போதிலும் அதை நீங்கள் வேறு வழிகளால் அதிகரிக்க முடியாது.

சென்ற இடமெல்லாம் நீங்கள் முகப்புத்தகத்தில் உங்கள் சாதனைகளையும் சாகசங்களையும் நண்பர்களுக்கு சுடச் சுடத் தெரியப்படுத்த இது உதவும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS