Socialize

Lance Armstrong இன் அனைத்து பதக்கங்களும் பறிமுதல்

இளழவகன்


லான்ஸ் ஆம்ஸ்ராங் (Lance Armstrong) என்ற அமெரிக்க துவிச்சக்கர வண்டி வீரரானா ஆம்ஸ்ராங் இன் அனைத்து பதக்கங்களும் அமெரிக்காவின் USADA (U.S. Anti-Doping Agency) என்ற குழுவால் பறிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளை மெருகுபடுத்த போதைகள் பாவிப்பதை கண்காணித்து தடுக்கும் குழுவான USADA ஆம்ஸ்ராங் இவ்வாறன தடை செய்யப்பட மருந்துகளை பாவித்து இருந்தமையை நிருபித்தனர்.

USADA இன் இந்த விசாரணை செல்லுபடியானதல்ல என்று கூறி முதலில் அதை தடுக்க Texas நீதிமன்றம் ஒன்றில் வழக்கொன்றையும் ஆம்ஸ்ராங் பதிவு செய்திருந்தார். ஆனால் நீதிபதி அந்த கோரிக்கைக்கு இணைக்க மறுத்துவிட்டார். அதனால் USADA இன் விசாரணை தொடர்ந்து இன்போது ஆம்ஸ்ராங் தடை செய்யப்பட்ட மருந்துகளை பாவித்து நிரூபிக்கப்படுள்ளது.
null
ஆனால் இப்போது அதை ஆம்ஸ்ராங் எதிர்த்து வாதிட விருமபவில்லை என அறிவித்துள்ளார். அதனால் ஆம்ஸ்ராங் இன் அனைத்து பதக்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. USADA இன் விசாரணைகளின் படி இவர் EPO ஐ (blood-booster erythropoetin) பாவித்துள்ளார். அது மட்டுமன்றி ஆம்ஸ்ராங் தனது குழுவில் உள்ள வேறு சிலரையும் EPO பாவிக்கும்படி துண்டியுள்ளார்.

1998 இற்கு பின் இவர் பெற்ற அனைத்து பதக்கங்களும் இந்த பறிமுதலில் அடங்கும். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட பதக்கங்களுள் 7 உலக பிரசித்தமான Tour de பதக்கங்களும் அடங்கும். இவற்றை இவர் 1999, 2000, 2001, 2002, 2003, 2004, 2005 களில் வென்றிருந்தார். 1971 இல் Texas இல் பிறந்த இவர் ஒரு அமெரிக்கர் ஆவர்.

1903 இல் இருந்து வருடம் ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி பெரும்பாலும் பிரான்சிலேயே நடைபெறும். சில சமயங்களில் அண்டை நாடுகளுக்குள்ளாலும் சென்றுவரும். சராசரியாக 2 இளைப்பாறும் நாள்களுடன் 21 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி ஏறக்குறைய 3,200 km தூரத்தை கடக்கும்.

1996 இல் ஆம்ஸ்ராங் ஒரு புற்றுநோயாளி என்று அடையாளம் காணப்பட்டிருந்தது. தனது பிரபல்யத்தை பயன்படுத்தி இவர் சுமார் U$ 500 மில்லியன் நிதி சேர்க்கவும் உதவியும் உள்ளார். பல தடவைகள் திருமணம் செய்த இவருக்கு 5 பிள்ளைகள் உண்டு.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS