Socialize

RONA வை கொள்வனவு செய்ய முனையும் LOWE’S

Boucherville, Quebec இல் தலைமையகத்தை கொண்ட RONA INC என்ற கனேடிய கட்டட பொருட்கள் விற்பனை நிறுவனத்தை LOWE’S என்ற அமெரிக்க நிறுவனம் $1.76 Billion இற்கு கொள்வனவு செய்ய முயற்சிக்கிறது. இதற்கு RONA இயக்குனர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். அனால் RONA இல் 12% பங்கு கொண்ட Invesco நிறுவனம் இந்த கொள்வனவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. Invesco நிறுவனம் தற்போதைய RONA இயக்குனர்களின் நடவடிக்கைகளில் அதிருப்த்தி கொண்டுள்ளமை இங்கு குறிப்பிட தக்கது.

இப்போது சிறியதும் பெரியதும்மாக சுமார் 800 விற்பனை நிலையங்களை கொண்ட RONA , 1939 ஆம் ஆண்டு Quebec மாகாணத்தில் இல் ஆரம்பிக்கப்படது. அன்று முதல் பல சிறிய/பெரிய மாற்று நிறுவனக்களை கொள்வனவு செய்த RONA, 2001 இல் Lansing நிறுவனத்தையும், 2003 இல் Rone-Depot ஐயும் கொள்வனவு செய்திருந்தது. தற்போது சுமார் $6 பில்லியன் வருட வருமானம் கொண்ட இது 30,000 வரையானோரை பணிக்கு அமர்த்தியுள்ளது.

அமெரிக்காவில் 1946 இல் ஆரம்பிக்கப்பட்ட LOWE’S இன்று சுமார் 1700 விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. இதன் தலைமையகம் North Carolina, USA இல் உள்ளது. இது 2007 இல் இருந்து கனடாவில் தனது விற்பனை நிலையங்களை நிறுவ தொடக்கியது என்றாலும் Quebec மாகாணத்தில் எந்தவொரு கிளையையும் கொண்டிருக்கவில்லை. மெக்ஸிகோவிலும் சில விற்பனை நிறுவனங்களை கொண்ட LOWE’S ஆஸ்திரேலியாவிலும் தனது நிலையங்களை நிறுவ திட்டம் கொண்டுள்ளது. தற்போது இது ஆஸ்திரேலியாவில் Masters என்ற பெயரில் Woolworths உடன் சேர்ந்து இயங்குகிறது. உலக அளவில் RONA 2வது பெரிய கட்டட பொருட்கள் நிறுவனமாக கருதப்படுகிறது. முதலாவது பெரிய நிறுவனமாக Home Depot விளங்குகிறது.

Quebec அரசின் நிலைப்பாடும் இவ்விடயத்தில் முக்கியமானது. குறிப்பாக Quebec தேர்தல் 04-09-2012 இல் நடக்க இருப்பதால் இவ் விடயம் பெரும்பாலும் அம்மாகாண அரசியல் தலையீடை கொண்டிருக்கும். பொதுவாக இது கனேடிய மத்திய அரசின் கட்டுப்பாடில் உள்ள விடயம் ஆகினும் Quebec மாகாணம் தனது பலத்தை பிரயோகிக்க முனையும் என நம்பலாம். RONA விற்கு மொத்த விற்பனை செய்யும் நிருவனம்கள் பலவும் Quebec மாகாணத்தையே சார்ந்தவை. Quebec மாகாண மொத்த விற்பனையாளர் ஒவ்வொரு வருடமும் சுமார் $2 பில்லியன் பெறுமதியான பொருட்களை RONA விற்கு விற்பனை செய்கிறார்கள்.

சுமார் 125,000 கனேடிய உறுபினர்களை கொண்ட Teamsters தொழில் சங்கமும் LOWE’S இன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. RONA நிறுவனம் Teamsters தொழில் சங்க உறுப்பினர்களையும் கொண்டது.

Toronoto Stock Exchange இல் RONA இன் குறியீடு RON.TO
New York Stock Exchange இல் LOWE’S இன் குறியீடு LOW

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS