Socialize

SONYயிற்கு காத்திருக்கும் Olympus

இளவழகன்

1919 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பஸ் (Olympus) தரமான பொருட்களை உலகிற்கு தந்ததோர் நிறுவனம். ஆரம்பத்தில் இந்நிறுவனம் வெப்பமாணி, நுண்மானி (microscope) போன்ற சிறிய பொருட்களை தயாரித்திருந்தாலும் பின்னர் புகைப்பட கருவிகள் (cameras), வைத்தியசாலை கருவிகள் போன்றவற்றையும் தயாரித்தது. இதன் முதல் புகைப்பட கருவி ௧௯௩௯ ஆம் ஆண்டு வெளிவத்தது. தற்போது gastro-intestinal endscopes இற்கான உலக வர்த்தகத்தின் 70% பங்கை இதுவே கொண்டுள்ளது.

ஆனால் இந்த நிறுவனம் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த காலம்களில் இந்த நிறுவனமும் பல கணக்கியல் சம்பந்தமான குளறுபடிகளுக்கு உள்ளாகியிருந்தது. உதாரணமாக 2008 ஆம் ஆண்டு Olympus பிரித்தானிய நிறுவனமான Gyrus Groupபை US$ 2.2 பில்லியன் கொடுத்து கொள்வனவு செய்திருந்தது. அப்போது இடைத்தரகருக்கு மட்டும் $ 687 மில்லியன் கொடுத்திருந்தது. இது ஒரு களவு என்றே பலராலும் கருதப்பட்டது.

அதுமட்டுமன்றி 1990 களில் ஏற்பட்ட பல நட்டங்களையும் இந்த நிறுவனம் கணக்கியலில் காட்டாது ஒளித்து வந்துள்ளது. இந்த உண்மைகள் வெளிவந்தபோது இந்த நிறுவனம் அரச விசாரணைகளுக்கு உள்ளானது.

இந்த ஆண்டு மாசி மாதம் முன்னாள் தலைவர் Tsuyoshi Kikukawa , முன்னாள் உபதலைவர் Hisashi Mori உட்பட 7 உயர்மட்ட அதிகாரிகள் கைதுசெய்யப்படு இருந்தனர்.

தற்போது பண நெருக்கடியில் உள்ள Olympus புதிய முதலீடுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முதலிட Fujifilm நிறுவனம் Panasonic நிறுவனம் போன்றன முன்வைத்தாலும் Olympus SONY யையே எதிர்பார்த்து உள்ளது. ஏனெனில் சோனி US$ 640 மில்லியன் வரை முதலிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்புஸ் தனது புகைப்பட கருவிகளுக்கு வேண்டிய sensor களை SONY யிடமே வாங்குகிறது.

இங்கு சோகம் என்னவென்றால் SONY ஒரு பொருளாதாரத்தில் உறுதியான நிறுவனம் அல்ல. அதுவும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ள ஒரு நிறுவனம்தான்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS